பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் பாடப்புத்தகங்களை வழங்குவோம்–கல்வி அமைச்சர்அடுத்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் அறிவித்துள்ளார்.


நாடளுமன்றில் வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சின் செலவீனங்கள் மீதான குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பின்தங்கிய நிலையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் வழங்குவதற்கு 2200 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி 7,47,093 மாணவர்களுக்கு பாதணி வவுச்சர்கள் வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் அறிவித்துள்ளார்.
புதியது பழையவை