நீண்ட விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரைஎதிர்வரும் நீண்ட விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு  பணிப்புரை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


குறிப்பாக அவசர பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்குமாறும் தாம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வார இறுதியில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற பராமரிப்பு பணிகளால் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்காக பாரிய செலவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை