அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் நாளை(22-12-2023) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி(01.02.2024) பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல் 
இது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளையுடன் முடிவடைகின்றன.இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும்.

மேலும், புதிய ஆண்டின் புதிய கல்வி தவணை நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை