மட்டக்களப்பு மாவட்ட அரச பேருந்து சாரதி மீது தாக்குதல்!மட்டக்களப்பில் கடமை புரியும் அரச பேருந்து சாரதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம்(19-12-2023) இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சாரதி 
தனியார் பேருந்து சேவைகளை மேற்கொள்பவர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


56 வயது மதிக்கத்தக்க சாந்தலிங்கம் என்ற அரச பேருந்து சாரதியே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். 

நேற்றைய தினம் இரவு  அம்பிலாந்துறைக்கு சென்ற சாரதி மீது தனியார் பேருந்து சேவைகளை மேற்கொள்பவர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயம் அடைந்த சாரதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை