மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதியில் மினிசூறாவளி தாக்கியதில் 15வீடுகள் சேதமடைந்தன.
பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கில் சீரற்ற காலநிலை நிலவும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கன மழை பெய்துவருகின்றது.
இன்று (27-12-2023)காலை போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதியில் மினிசூறாவளி தாக்கியதில்
பல வீடுகள் சேதமமைடந்தன.
சூறாவளி காரணமாக பயன்தரு மரங்களும் விழுந்துள்ளதுடன் சில இடங்களில் வீதிகளிலும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதனால் போக்குவரத்துச்செய்வதில்
மக்கள் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன்
தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவுவதன் காரணமாக பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு வானிலை அவதான நிலையம்