உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளுக்காக அரசாங்கம் வழங்கும் பணம் குறித்து வெளியான அறிவிப்பு!உள்ளுராட்சி மன்றங்களின் சில அதிகாரிகள் உரிய முறையில் அரச சேவையை வழங்குவதில்லை என தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படுவதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளுக்காக அரசாங்கம் வழங்கும் பணத்தை நிறுத்துவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,


“குறித்த உத்தியோகத்தர்கள் தமது பயணச் செலவு, மேலதிக நேர கொடுப்பனவு போன்றவற்றை சபையின் பணத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றனர்.


மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி நிறுவனங்களின் வினைத்திறன் குறித்து கணக்கெடுப்பு நடத்தியதாகவும், அதற்கேற்ப சிறந்த மாநகர சபை, மாநகர சபை மற்றும் பிராந்திய சபைகளை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி அனைத்து உள்ளுராட்சி மன்றங்களும் தரம் பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப, முறையாக மக்கள் சேவை செய்யாத உள்ளுராட்சி அமைப்புகளை ஆய்வு செய்து, அவற்றின் செயல்திறனை அதிகரிக்க தேவையான வசதிகள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படும்.


குறைந்த வசதிகளைக் கொண்ட உள்ளூராட்சி மன்றங்களை மேம்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டல்களையும் வசதிகளையும் அமைச்சு வழங்கும்.” என்றார்
புதியது பழையவை