துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு!



பாதுக்க, துந்தான பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாதாள உலகக் குழு உறுப்பினர் மன்னா ரொஷான் மற்றும் அவரது ஆதரவாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் 2 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுக்காவில் உள்ள ஏல காணியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாம்பல் நிற ஜீப்பில் ஒருவரின் சடலம் காணப்பட்டதுடன், மற்றைய சடலம் அருகில் காணப்பட்டது.

ஜீப்பிற்குள் கண்டெடுக்கப்பட்ட சடலம் பாதாள உலகக் குழு உறுப்பினர் காரியவசம் அத்துகோரல ரொஷான் இந்திக்க என்றழைக்கப்படும் மன்னா ரொஷானின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
புதியது பழையவை