டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்



இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (07-12-2023) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய் 87 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 331 ரூபாய் 78 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 402 ரூபாய் 55 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 418 ரூபாய் 50 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.


யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344 ரூபாய் 87 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 359 ரூபாய் 29 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபாய் 98 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 245 ரூபாய் 87 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 208 ரூபாய் 51 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 219 ரூபாய் 17 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 238 ரூபாய் 13 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 248 ரூபாய் 94 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.


அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.67 ரூபாயிலிருந்து 321.18 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 332.89 ரூபாயிலிருந்து 332.38 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.


கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.75 ரூபாயிலிருந்து 320.37 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 332 ரூபாயிலிருந்து 330.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாயாக மாறாமலுள்ள வேளை விற்பனைப் பெறுமதி 332 ரூபாயிலிருந்து 331 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை