வாவிக்குள் குளித்து கொண்டிருந்த பெண் துஸ்பிரயோகம் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!



வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய திருமணமான பெண், வாவிக்குச் சென்று குளித்துக்கொண்டிருந்த போது,

அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபரை குற்றவாளியாக இனங்கண்ட மேல் நீதிமன்றம்,

அவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அம்பாறையில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் திருமணமான பெண்ணே,அன்றைய தினம் கடமை முடிந்து நீராடிக்கொண்டிருந்த போது, சந்தேகநபர் இந்தக் குற்றத்தை புரிந்துள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக இனங்கண்ட அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி நலிந்த ஹேவாவசம், குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அதற்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. அதனை செலுத்த தவறினால், 3 மாதங்கள் ஒரு தளர்வான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 150,000 ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் செலுத்த தவறின் ஒரு வருடம் ஒரு தளர்வான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது,

தண்டப்பணம் மற்றும் நட்டஈடு செலுத்தாவிடின் சிறைத்தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்கவேண்டுமென வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை