வைத்தியசாலை கட்டடத்தில் தீ விபத்து - நோயாளர்கள் வெளியேற்றம்அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் உள்ள கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தீ விபத்து இன்று (11-12-2023) போதனா வைத்தியசாலையின் ‘மெத்சிறி செவன’ கட்டிடத்திலேய ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தீயை அணைக்கும் முயற்சியில் அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தீயணைப்பு வாகனங்கள்
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கட்டிட வளாகத்தில் இருந்த உள்நோயாளிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் கட்டிடத்தின் கூரையில் தீ தொடர்ந்து எரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுராதபுரம் பொது வைத்தியசாலையுடன் இணைந்த ‘மெத்சிறி செவன’ கட்டிடம் 2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை