மனித உரிமை இல்லாத நாட்டில் ஆணைக்குழு தேவையா - மட்டக்களப்பில் போராட்டம்!சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று(10-12-2023) மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுக்கு முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்றது.

மனித உரிமை மீறல்கள்
இதன்போது இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், மிருக வதைகள், பண்ணையாளர்கள் பிரச்சினை, பொலிஸாரின் அச்சுறுத்தல், ஊடக அடக்குமுறை, சிவில் சமூகங்கள் மீதான அடக்குமுறை போன்ற வாசகங்களுடன் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாகவும் சர்வதேச பொறிமுறையொன்று முன்னெடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், விவசாயிகள்,பண்ணையாளர்கள்,மதகுருமார்கள், மக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை