வவுனியா காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர், தனது மனைவியைத் தாக்கி, தனது பதின்மூன்று வயது மகளை வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் நிலையில், அநுராதபுரம் காவல் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் (25 -12-2023) ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் சந்தேகநபரான கான்ஸ்டபிளின் மனைவி கடந்த 25ஆம் திகதி மாலை அனுராதபுரம் காவல்துறை பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விசாரணையில் வெளியான தகவல்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முப்பத்தெட்டு வயதுடையவர் என காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில்
அநுராதபுரம் சாலியபுர பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபரான காவல்துறை கான்ஸ்டபிள் (26) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் காவல் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.