அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மொபிடெல் நிறுவனத்தினால் வழங்கப்படும் உபகார பெகேஜை மீண்டும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த பெகேஜ்களை புதிய சலுகைகளுடன் மீண்டும் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அந்த சலுகை பெகேஜை அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவுசெய்துள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிடத்தில் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.