துண்டித்த மின்சாரத்தை இனைப்பதற்கு - பாலியல் சேட்டைக்கு அழைத்த ஒப்பந்த மின்சார ஊழியர் கைது!
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தனிமையில் இருந்த பெண்ணின் வீட்டில் மின்சார நிலுவை காரணமாக துண்டித்த மின்சார நிலுவையை பணம் செலுத்தாது மீண்டு மின்சாரத்தை இணைத்து தருகின்றேன் என்று பாலியல் சேட்டைக்கு கூப்பிட்ட ஒப்பந்த மின்சார சபை ஊழியர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைப்பு செய்து பொலிசாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை கைது செய்துள்ள சம்பவம்   வியாழக்கிழமை (25-01-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதில் கைதானவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த 49 வயதுடையவர் எனவும் இவரை பலாத்கார பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை