துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த அரசியல்வாதியின் வீட்டில் சோதனை
மாத்தறை - பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த அரசியல்வாதியின் குருநாகல் இல்லம் பொலிஸாரின் விசேட சோதணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பெலியத்த பிரதேசத்தில் இன்று (22-01-2024) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்திருந்ததுடன், ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.


ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்
இந்நிலையில், சம்பவத்தில் உயிரிழந்த அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவின் வீட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டில் சட்டவிரோத பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

குறித்த வீட்டில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை