மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சேவைகள் வழமைபோன்று இடம்பெறுகிறது
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அனைத்துப் பிரிவுகளும் வழமைபோன்று இயங்கி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.


நேற்றைய தினம் வைத்தியத்துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டம் முடிவுக்கு
வந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வழமைபோன்று, சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் பகிஸ்கரிப்புப் போராட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்திருந்த போதும், அந்த அழைப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சேவை வழங்கலில் தடங்கலை ஏற்படுத்தவில்லை.
புதியது பழையவை