இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற 42 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்பு!
இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற 42 சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய, நாட்டை விட்டு தப்பிச் சென்ற 42 சந்தேக நபர்களுக்கு சர்வதேச சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
புதியது பழையவை