மட்டக்களப்பு சதுரங்க குழுமத்தின் ஏற்பாட்டில் சதுரங்க சுற்றுப்போட்டிமட்டக்களப்பு சதுரங்க குழுமத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண வீரர்களுக்கான சதுரங்க சுற்றுப்போட்டியொன்று நடாத்தப்படுகிறது.

முதற் தடவையாக கிழக்கு மாகாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச ரீதியான தரப்படுத்தலுக்குட்பட்ட ‘மேஜர்’ தர
போட்டியில், இரு பாலாரும் வயது வேறுபாடின்றி பங்குபற்றி வருகின்றனர்.

மாவட்டம் தோறும் நடைபெற்ற அறிமுகப் போட்டியில் தெரிவு செய்யபப்பட்டவர்கள் இவ் மேஜர் தர போட்டியில் போட்டியிடுகின்றனர்.

நடுவராக சர்வதேச தர சதுரங்கப் போட்டி நடுவர் திவாங்க திஸ்சேர கலந்து கொண்டுள்ளார்.

இச்சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டுவோர், தேசிய நிலையில் நடைபெறவுள்ள போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மாகாண மட்டப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.
புதியது பழையவை