தமிழரசுக்கட்சிக்கு எதிராக திருகோணமலையில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!


இன்றைய தமிழரசுக்கட்சிக்கு எதிராக திருகோணமலையில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும(05-04-2024)
ஒத்திவைக்கப்பட்டுள்ளது
                                     

திருகோணமலை வழக்கின் எதிரிகளாக குறிப்பிட்ட   ஏழுபேரில் ஆறு பேர்களான.                                            மாவை 
சிறிதரன்
யோகேஷ்வரன்,
குகதாசன்,
சத்தியலிங்கம்,
குலநாயகம்,

ஆகியோர் இன்று(29-02-2024) சமூகம் கொடுத்தனர் அவர்கள் ஆறுபேரும் தமிழரசுக்கட்சி உபவிதிப்படி மீண்டும் தொகுதிரீதியாக தெரிவுகளை நடத்தி புதிய நிர்வாக தெரிவை நடத்த பூரண சம்மதத்தை தெரிவித்தனர்.

இதனை நீதவான் ஏற்றுக்கொண்டபோதும் அந்த வழக்கில் குறிப்பிடப்பட்ட எதிரிகளில் ஒருவரான சுமந்திரன் இன்று சமூகம் கொடுக்காமையால் இறுதி தீர்ப்பை (05/04/2024)ல் ஒத்திவைத்தனர்.

05/04/2024, க்கு பின்னர் தொகுதிக்கிளை 24, பேரும், மத்தியகுழு 41,பேரும் (24+41=161)பொதுச்சபை மொத்தம் 161, பேருடன் புதிய நிர்வாகத்தெரிவும்  மாநாடும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை