இலங்கையில் மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியாகவுள்ள விசேட அறிவிப்பு!
மின்சாரக் கட்டணங்களை குறைப்பது தொடர்பிலான இலங்கை மின்சாரசபையின் யோசனை குறித்து இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தனது தீர்மானத்தை இன்று (28-02-2024)அறிவிக்கவுள்ளது.

மின்சாரக் கட்டணங்கள் குறைந்தபட்சம் 18 வீதத்தினால் குறைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நோக்கில் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்றைய தினம் கூட உள்ளது.


கட்டண குறைப்பு

கடந்த 22 ஆம் திகதி கட்டணத் திருத்தம் தொடர்பிலான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட அதே அளவில் மின்சாரக் கட்டணங்களை குறைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை