இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடுநாடு முழுவதும் பல பகுதிகளில் நாளாந்த எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

காலை 10.00 மணி வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் செலுத்தும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எரிபொருள் விற்பனை வீழ்ச்சி
எரிபொருள் விற்பனை பாரியளவில் குறைந்துள்ளதால் காலை பத்து மணிக்குள் பணத்தை வைப்பு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், காசோலை வசதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புதியது பழையவை