அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
அதன்படி அவர் ஜனாதிபதி நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 8 ஆம் திகதி இரவு அவுஸ்திரேலியாவிற்கு சென்றார், அங்கு,
7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றிய ஜனாதிபதி, பல நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை அவர் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.