கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் - புதிர் வழங்குதல் தொடர்பான அறிவித்தல்!திருமூலநாயனாரால் சிவபூமி என சிறப்பித்து கூறப்பெற்ற இலங்கைமணித் திருநாட்டில் வயலும் வயல் சார்ந்த மருதநிலப் பிரதேசமாய் நெற்செய்கைக்குப் பெயர்பெற்று விளங்கும் மட்டக்களப்பு படுவான்கரைப் பெருநிலத்தின் கண் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியாய் தானாக தோன்றி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி புதிர் நெல் வழங்கும் இறைபணிக்கு இறைவன் திருவருள் பாலித்துள்ளமையால் முதலில் சுவாமிக்கு அளந்து வழங்கப்பட்டு வரிசை முறைப்படி குருமார் , ஆலயத்தினுள் சிறப்புப் பணி செய்பவர்களுக்கும், ஏனைய சகல இறையடியார்களுக்கும் புது நெல் வழங்கப்படும்.

கைங்கரியமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16-02-2024)ஆம்  திகதி நண்பகல் 12.00 மணி பூசைக்கு புது அமுது , பொங்கல் செய்யப்பட்டு சுவாமிக்கு வைத்து மக்களுக்கும் வழங்கப்படும் என்பதை ஆலய பரிபாலன சபையின் சார்பாக இறையன்புடன் அறியத்தருகின்றோம்.

ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

புதியது பழையவை