மட்டக்களப்பு - தன்னாமுனை பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டிருந்த காத்தான்குடி - சேகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரஹீம் என்பவர் உயிரிழந்துள்ளதுள்ளார.
மேலும் விபத்தில் குழந்தை, பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்டுகிறது.
மேலும், EP YM 9230 எனும் இலக்க முச்சக்கர வண்டி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லுமாறு அவசர கோரிக்கையொன்றும் விடுக்கப்பட்டுள்ளது.