பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து - 13 வயது சிறுவன் சாதனை



திருகோணமலை இந்து கல்லூரியின் 13 வயதான மாணவன் ஹரிகரன் தன்வந்த் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ளார்.

இன்றைய தினம் (01-03-2024) அதிகாலை 5.30 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த தன்வந்த் மதியம் 2.00 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.

தனுஸ்கோடி முதல் தலைமன்னார் வரையான 32 கிலோ மீற்றர் தூரத்தை மிகக் குறைவான நேரத்தில் நீந்திக் கடந்து இலங்கையில் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

9 மணித்தியாலங்கள் 37 நிமிடங்கள் 54 செக்கன்களில் நீந்திக் கடந்து இலங்கையில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.


புதியது பழையவை