கழிவுத் தண்ணீர் கால்வாயில் பாய்ந்து - குடு ராணி கைது!




மட்டக்குளியில் கதிரானவத்தை குடு ராணி என அழைக்கப்படும் 45 வயதுடைய பெண் ஒருவரை பெரும் முயற்சியின் பின்னர் பொலிஸார் நேற்று (03-03-2024) கைது செய்துள்ளனர்.

யுக்திய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் விசேட பணியக அதிகாரிகள் குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது, ​​அவர் அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் குதித்துள்ளார்.


பின்னர் மேலதிக பொலிஸ் அதிகாரிகள் குழு, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 5 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதை பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
புதியது பழையவை