இன்றைய வானிலை முன்னறிவித்தல் - மக்களுக்கு எச்சரிக்கை!
களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்தோடு, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட காலநிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு (20-30) பதிவாகும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


முன்னெச்சரிக்கை

அதேவேளை, கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-45) அதிகரிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காலநிலை மாற்றங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
புதியது பழையவை