இயந்திரத்தின் மூலம் நவீன முறையில் மட்டக்களப்பில் வேளான்மை நாற்றுக்கள் நடப்பட்டது!




மட்டக்களப்பில் இடைப்போக நெல் விதைப்பு இடம்பெற்று வருகின்ற நிலையில் மட்டக்களப்பில் உள்ள பனிச்சையடி கண்டத்தில் 3 ஏக்கர் பரப்பில் Bg366 இன நெல் நாற்று இயந்திரம் மூலம் நடப்பட்டது.

இவ்வாறு இயந்திரத்தின் மூலம் மட்டக்களப்பில் நாற்று நடப்படுவது இதுவே முதன்முறையாகும்.


இதனை இந்திரா குழும குழுவினர் முன்னெடுத்ததுடன் இந்திரா குழுமத்தினரின் கிழக்கு மாகணத்தின் முதல் செயற்றிட்டமாகவும் இது அமைந்துள்ளதாக தெரிவித்தனர்

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய உதவி பணிப்பாளர் திரு.சித்திரவேல் ஐயா,
யாழ் பல்கலைகழக விரிவுரையாளரும் இந்திரா குழும நிறுவுனர் திரு.ரஜிதன், மட்டக்களப்பு மாவட்ட விவசாய போதனாசிரியர்கள் மற்றும்
முன்னோடி விவசாயிகள் பலரும் கலந்து கொண்டு இயந்திரம் மூலம் நாற்று நடுதல் பற்றிய களப்பயிற்சியும் நாற்று நடும் போது தங்கள் வயலில் மண்னை எவ்வாறான நிலையில் பண்படுத்தப்படல் வேண்டும் போன்ற பல விடயங்களை அறிந்து தெரிந்து கொண்டனர்.




புதியது பழையவை