மட்டக்களப்பு வேத்துச்சேனைக்கிராம மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு!



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனைக்கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்குரிய ஆரம்பக்கட்ட வேலைத்திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆரம்பித்து வைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனை கிராம மக்கள் இதுவரை காலமும் தமக்குரிய சுத்தமான குடிநீரின்றி மிகவும் இன்னலுற்ற நிலையில் தமது வாழ்வைக் கழித்துள்ளனர்.

இதனால், அக்கிராமத்தில் பலர் நோய்களுக்கும் உட்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.


மக்களின் கோரிக்கை


இந்த விடயம் குறித்து அக்கிராம மக்கள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.


மக்களின் கோரிக்கைய ஏற்று துரிதமாகச் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் தொடர்பு கொண்டு வேத்துச்சேனைக் கிராம மக்களுக்குரிய குழாய்மூலமான சுத்தமான குடிநீர் வழங்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


இதற்கிணங்க அக்கிராமத்திற்கு குடிநீர் வழங்குவதற்குரிய ஆரம்பக்கட்ட வேலைத்திட்டங்களை உத்தியோக பூர்பூவமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.


புதியது பழையவை