குவைத்தில் விபத்தில் சிக்கிய மனைவியை - இலங்கைக்கு அழைத்துவர சிறுநீரகத்தை விற்கும் கணவன்
குவைத்தில் விபத்தில் சிக்கிய தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக கணவர் சிறுநீரகத்தை விற்கவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

குவைத்தில் வீட்டு வேலை செய்யும் போது விபத்துக்குள்ளான தனது மனைவியை அழைத்து வர வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்ட ஆறரை இலட்சம் ரூபாவை பெறமுடியாமல் தவித்த கணவர் தனது சிறுநீரகத்தை பதினைந்து இலட்சம் ரூபாவிற்கு விற்கவுள்ளார்.


சிறுநீரகத்தை தானம் செய்ய தயாரான கணவர்
சிறுநீரகத்தை தானம் செய்ய தயாரான கணவர் மனம்பிட்டிய மஹாவெவ கொலோகனவாடிய முகவரியைச் சேர்ந்த 28 வயதான இஷாரா சரச்சந்திர என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.


டிசம்பர் 20, 2023 அன்று, குருநாகல் பகுதியில் ஒரு முகவர் மூலம் குவைத்தில் வீட்டு வேலை செய்யச் சென்றார் செவ்வந்தி மஹேஷிக. அந்த வீட்டில் வேலை செய்யும் போது திடீரென விழுந்ததால், வேலை செய்ய முடியாத அளவுக்கு உடல் பலவீனமடைந்ததாக இஷாரா சரத்சந்திர தெரிவித்தார்.

மனைவியை அழைத்து வருவதற்கு
கொழும்பு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மனைவியை அழைத்து வருவதற்கு ஆறரை இலட்சம் ரூபா பணம் தேவைப்படுவதாகவும் இஷார சரச்சந்திர தெரிவித்தார்.


வெளிநாட்டில் இருக்கும் செவ்வந்தி மஹேஷிகா ஜயவீரவுக்கு 11 வயது சிறுமியும், 9 வயது மற்றும் 3 வயதுடைய இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர், அந்த குழந்தைகள் தற்போது மகேஷிகா ஜயவீரவின் தாயாரான திருமதி எம்.எச். தம்மிகா விஜேசிங்கவின் அரவணைப்பில் உள்ளனர்.
புதியது பழையவை