மட்டக்களப்பில் கம்பீரமான தோற்றத்துடன் விவேகானந்தர் சிலை திறந்துவைப்பு!மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகே நிர்மாணிக்கப்பட்ட, சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின்
நூற்றாண்டின் தொடக்க விழாவினை சிறப்பிக்கும் முகமாக திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு நிகழ்வுகள் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் தலைமையில்
நடைபெற்று வருகின்றன.
இதெனொரு நிகழ்வாக கல்லடிப்பாலத்தடியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட பீடம் அடங்கலாக 25 அடி நீளமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை இன்று(31-03-2024)
திரைநீக்கம் செய்யப்பட்டது.

பிரதம அதிதியாக ராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் கலந்து சிறப்பித்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கருணாகரம்,
இரா.சாணக்கியன், முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர்களான கே.கருணாகரன், கலாமதி பத்மராஜா, கே.விமலநாதன் உள்ளிட்டவர்களும்
கலந்துகொண்டனர்.

புதியது பழையவை