மட்டக்களப்பில் தலைமறைவாகி வந்த சந்தேகநபர் ஒருவர் 3 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் 2 வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தால் திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த நிலையிலேயே இன்று (10-03-2024) கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டு ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் கடந்த 2020ஆம் ஆண்டு சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சம்பவங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்திருந்தார்.
அதனையடுத்து, இவர் நீதிமன்ற வழக்கிற்கு முன்னிலையாகாமல் கடந்த 3 வருடங்களாக தலைமறைவாகிய நிலையில் அவருக்கு திறந்த பிடியாணையை நீதிமன்றம் பிறப்பித்தது.
இந்நிலையில், கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாளை கடற்கரை பகுதியில் குடியேறி இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவதினமான இன்று காலை அந்தப் பகுதி கடற்கரையில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்த பொலிஸார் 3 வருடமாக தலைமறைவாகியிருந்த நபரை கைது செய்துள்ளனர்.