சர்வதேச சுழியக் கழிவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஏற்பாட்டில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச சுழியக் கழிவு தினமான நேற்று (31-03-2024)போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதானம்  முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய தினம் பொதுமக்களுக்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகைகியல் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் எஸ்.பகீரதனின் தலைமையில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பழுகாமம் பொது நூலகத்தில் ஆரம்பமாகி பட்டிருப்பு பாலம் வரைக்கும் 7கிலோமீற்றர் தூரம் கொண்ட வீதி ஓரங்கள் இன்றைய தினம் சிரமதானம் மூலம் துப்புரவுசெய்யப்பட்டதுடன் அங்கிருந்த கழிவுகளும் அகற்றப்பட்டன.

சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையின் சுத்தப்படுத்தும் சிரமதான பணியானது போரதீவுப்பற்று பிரதேசசபை உத்தியோகஸ்தர்கள்,ஊழியர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.


புதியது பழையவை