மட்டக்களப்பு பள்ளிவாசலில் இன ஒற்றுமையை வலியுறுத்தும் சம்பவம்நிகம்பு பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த மத குரு ஒருவர் நேற்றைய தினம் மட்டக்களப்பு காத்தான்குடிக்கு வருகை தந்த அவர் தராவீஹ் மற்றும் கியாமுல்லைல் தொழுகைகளின் போது முழுமையாக எமது பள்ளிவாயலில் அமர்ந்திருந்தார் என சமூக வளைத்தளங்களில் சமூக ஆர்வாளர்கள் இதனை பகீர்ந்துள்ளனர்.


மேலும் அவர்  பள்ளியில் இருந்தவர்களுக்கு சிற்றுண்டி வழங்க வேண்டும் என்று அவரது ஏற்பாட்டிலேயே அதனைக் கொண்டு வந்து அவரது கையாலினாலேயே தொழுகையாளிகளுக்கு வழங்கி வைத்த மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம் எமது பள்ளிவாயலில் நடந்ததாக கூறியுள்ளார்.அல்ஹம்துலில்லாஹ் அவருடன் விமானப் படை உயர் அதிகாரிகளும் சமூகமளித்திருந்திருந்தததாக குறிப்பிட்டுள்ளார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எமது அல் அக்ஸா ஜும்ஆ பள்ளிவாயலுக்கு வருகை தந்து பார்வையிட்டு விட்டு சென்றுள்ளார் என பதிவிட்டுள்ளார்.
புதியது பழையவை