நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் முதல் தடவையாக நாடாளுமன்றம்(Parliament) நாளை(24-04-2024) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தச் சட்டமூலம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழான உத்தரவுகளின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை நடைபெறவுள்ளது.

ஒத்திவைப்பு வேளை விவாதம்
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
புதியது பழையவை