இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு!இன்று (30-04-2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டருக்கு 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 368 ரூபாவாகும்.

95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.

ஒட்டோ டீசல் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 333 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுப்பர் டீசல் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.


இதேவேளை, மண்ணெண்ணெய் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 215 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை