மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் நியமனம்!
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக, வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் இன்று தனது கடமைகளைப்
பொறுப்பேற்றுக்கொண்டார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் புதிய பணிப்பாளராக கடமையேற்றுள்ள வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
பணிமனையின் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் நவலோஜிதன் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், பிராந்திய சுகாதார பணிமனையின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள்,
ஊழியர்கள் வரவேற்றனர்.


தொடர்ந்து தனது கடமைகளைச் சம்பிரதாயபூர்மாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் பதவியுயர்வு பெற்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள்
பிரதிப்பணிப்பாளராக பதவி வகித்து வரும் நிலையில், மேலதிகமாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றிய வைத்தியர் ஜி.சுகுணன், வவுனியா மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளராக
நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை