பாடசாலை மாணவர்கள் - 45 வயதுக்கு உட்பட்ட பெண்களிற்கு அனுமதி இல்லை
இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்

55 நாட்களில், 98 ஆலயங்களைத் தரிசித்து, 815 கிலோமீற்றர் தூரம் நடைபயணம்

21 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் வேஷ்டியோடும், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் காவி புடவையுடனும் கலந்து கொள்ள வேண்டும். செல்லும் வழியில் உள்ள ஆலயங்களில் பஜனை மற்றும் சிரமதானத்தில் பங்கு கொள்ள வேண்டும்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் எக்காரணம் கொண்டும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் யாராவது சமய ஆசார முறைக்கு மாறான நடத்தையில் ஈடுபட்டால் இடைநடுவில் நிறுத்தப்படுவார்கள் என்று ஜெயாவேல்சாமி மேலும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகல 7 மாவட்டங்களையும் இணைத்து 55 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர கதிர்காம பாதயாத்திரையாக கருதப்படுகின்றது.
புதியது பழையவை