இலங்கைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்"குஷ்" என்ற கஞ்சா போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ஐந்து மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய நடனக் கலைஞரான சந்தேகநபர் தனது சூட்கேஸில் மறைத்து வைத்து இந்த கஞ்சாவை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார்.போதைப்பொருளின் பெறுமதி 
சந்தேகநபர் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து எயார் ஏசியா விமானம் FD-140 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

05 கிலோ 278 கிராம் எடையுடைய இந்த "குஷ்" கஞ்சா தனித்தனியாக 36 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை