கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்யச்சென்ற 5 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!



மகொன முங்கென பிரதேசத்தில் ஐந்து வயதுச் சிறுமி கைத்தொலைபேசியை சார்ஜ் செய்யச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகொன முங்கென பிரதேசத்தை சேர்ந்த விஹிகி நடாஷா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பேருவளை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை