மக்கள் வங்கி வழங்கியுள்ள அவசர அறிவுறுத்தல்
மக்கள் வங்கியிலுள்ள வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வங்கியின் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தலில், உயர் தரத்தில் தேர்ச்சி பெற்ற 18 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு மக்கள் வங்கியில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் மற்றும் முழுமையான விவரங்களை அறிய கீழே உள்ள நீல நிற இணைப்பைக் கிளிக் செய்யவும் அல்லது “Bank” என்று கமெண்ட் செய்யவும் எனக் கோரும் இந்த விளம்பரம் முற்றிலும் போலியான மோசடியாகும் என்பதையும், இந்த விளம்பரத்திற்கும் மக்கள் வங்கிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதையும், இத்தகைய மோசடிக்காரர்களின் செயல்களில் கிக்கிக் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்தோடு மக்கள் வங்கியின் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் எந்நேரமும் மக்கள் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளம், உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்குகள் மற்றும் பொது செய்தித்தாள் விளம்பரங்கள் போன்ற உத்தியோகபூர்வ ஊடகங்களில் மட்டுமே வெளியிடப்படும் என்பதையும் அத்தகைய உத்தியோகபூர்வ விளம்பரங்கள் இத்தகைய மூன்றாம் தரப்பு சமூக ஊடகங்கள் அல்லது பிற தரப்பினர் மூலமாக ஒருபோதும் விளம்பரப்படுத்தப்படுவதில்லை என்பதையும் நாம் வலியுறுத்துகிறேம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை