அட்சய திருதி - திடீர் மாற்றத்துக்குள்ளாகிய தங்கத்தின் விலை



கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், இன்றையதினம் அட்சயதிருதியை முன்னிட்டு (10-05-2024) தங்கத்தின் விலையானது உயர்வடைந்துள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 702,934 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 24,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 198,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 22,740 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 181,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 21,700 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம் 173,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

செட்டியார் தெரு விபரங்கள்
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 191,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 175,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
புதியது பழையவை