ஈழமக்கள் ஈவிரக்கமின்றி இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் -உரிமையில்லையா? பொலிஸார் காட்டுமிராண்டித்தனம்!



ஈழமக்கள் ஈவிரக்கமின்றி இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயக பகுதிகளில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் நினைவு கூரப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இன்று (14-05-2024) காலை அம்பாறை பெரிய நீலாவணை பாண்டிருப்புப் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்கும் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


முள்ளிவாய்க்கால் கஞ்சி 
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டு வடக்கு கிழக்கு முழுவதும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இன்றைய தினம் கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.





இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த பெரியநீலாவணை பொலிஸார், நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து குறித்த நிகழ்வினை நிறுத்துமாறு கூறயுள்ளனர்.


பொலிஸார் அராஜகம்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் என்பவருக்கு தடை உத்தரவு உள்ளதாகவும் நிகழ்வினை நிறுத்துமாறும் கூறியுள்ளனர்.

அத்துடன் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி ஆகியோருக்கும் பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இதேவேளை முள்ளைவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உட்பட நால்வர் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை