தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட்லு - ஜனாதிபதி இடையில் சந்திப்பு!இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு, (Donald Lu) இன்று (13-05-2024) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார்.

இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பையும் டொனால்ட் லூபாராட்டினார்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதியின் சர்வதேசவிவகாரங்களுக்கான பணிப்பாளர் தினுக் கொழும்பகே உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர.
புதியது பழையவை