இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் தலைநகர் புதுடெல்லியை சென்றடைந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் கோலாகலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (09-06-2024) புதுடெல்லிக்கு சென்றுள்ளனர்.
அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முஹம்மது முயிசு, சிசெல்ஸ் துணை ஜனாதிபதி அகமத் ஆபிப், பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனா, மொரிசியஸ் பிரதமர் பிரவீந் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமால் தஹல் பிரசண்டா மற்றும் பூட்டான் பிரதமர் சேரிங் டொப்கே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ்வாறு பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்ளும் தலைவர்கள் இன்றைய தினம் மாலை இராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவினால் வழங்கப்படும் விருந்துபசாரத்திலும் பங்கேற்கவுள்ளனர்.