க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள், இரண்டாம் சுற்று விடைத்தாள் மதிப்பீடுகள் நிறைவடைந்த பின்னர் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாம் சுற்று விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏறக்குறைய 80 சதவீதமான ஆரம்ப மதிப்பீட்டு செயல்முறை ஏற்கனவே முடிந்துவிட்டது என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டுச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து கல்வியாளர்கள் மற்றும் ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்காக பரீட்சைகள் திணைக்களம் நன்றி தெரிவித்துள்ளது.
புதியது பழையவை