முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!பெண்கள், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆசிரியர் பெருமை திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 2500 ரூபா மாதாந்த கொடுப்பனவு 100 வீதத்தால் அதிகரித்து 5000 ரூபாவாக வழங்கப்படவுள்ளது.

இதன்படி, பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் யமுனா பெரேரா, (19-06-2024 )திகதியிட்ட சுற்றறிக்கை மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.


அவரது சுற்றறிக்கை அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இதன்படி அந்த ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் முதல் தலா 5000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை