மட்டக்களப்பு கச்சேரி வரலாறு..!மட்டக்களப்பு இடச்சுக் கோட்டை (ஒல்லாந்து கோட்டை) அல்லது மட்டக்களப்பு போர்த்துக்கீச கோட்டை என அழைக்கப்படும் கோட்டையானது 1628ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு, ஒல்லாந்துக்காரரால் 1638இல் கைப்பற்றப்பட்டது.

மட்டக்களப்பில் அரசாங்க அலுவலகம் என்ற பெயரில்  1870, ம் ஆண்டுதான் நிறுவப்பட்டது, மட்டககளப்பு மாவட்ட முதலாவது அரசாங்க அதிபராக ஆர், டவிலீயூ, ரி, மொரிஷ் நியமனம்பெற்றார்.

மட்டக்களப்புக்கு 1870, அரசாங்க அதிபர் அலுவலகம் கச்சேரிக்கு வருவதற்கு முன்னம் உப அலுவலகமாக மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகம் திருகோணமலையில் 1795 தொடக்கம் இயங்கியதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பு கச்சேரியில் முன்பு அரசாங்க அதிபர் காரியாலயமாகவும், பின்னர் மாவட்ட செயலகமாகவும் கச்சேரியில் 1870, ஆண்டு தொடக்கம் 2024, வரை 154, வருடங்கள் அங்கு இயங்கியது.                                   

திராய்மடு கிராமத்தில் உள்ள அரசகாணியில்  2016ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டு 1055, மில்லியன் ரூபா செலவில் புதிய மாவட்ட செயலக கட்டடத்தொகுதியின் நிர்மாணப் பணிகள் முடிவுற்று தற்போது கடந்த (10-06-2024)ஆம் திகதி மாவட்ட அரச அதிபர் திருமதி. ஜஸ்டினா முதளிதரனாலும் பின்னர் பத்து நாட்கள் கடந்து மீண்டும் (22-06-2024)ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவாலும் நாடா வெட்டி திறக்கப்பட்டது.புதியது பழையவை