உலகத்தில் தமிழீழம் பேசுகிறது…!



ஈழவிடுதலைப்போராட்டம் காரணமாக பல ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்துள்ள ஈழத்தமிழர்களின் பரம்பரை வாரிசுகளான இளையோர் பல்துறைகளிலும் உலகத்தில் தடம்பதித்து தமிழீழம் என்ற ஓர நாடு உள்ளது என்பதை சர்வதேச அரங்கில் நிருபித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழீழ உதைபந்தாட்ட மகளீர் அணி முன்னணியில் உள்ளது..!

ஐரோப்பிய கலாச்சார தலைநகர் Bodø வில் CONIFA  மகளிர்   உலகக்கிண்ணப்போட்டியில்  தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி பங்குபற்றுகிறது.. !

CONIFA வின் இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெறவுள்ளது.2024 ஆம் ஆண்டிற்கான கலாச்சார தலைநகரமாக Bodø நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இந்நகரமே நிகழ்வில் ஒரு பகுதியாக செயற்படுவதுடன் CONIFA  மகளிர் உலகக்கிண்ணம் 2024 இனை தொகுத்து வழங்கவுள்ளது.

இந்தப்போட்டியானது விளையாட்டுத்துறையில் 
ஈடுபடும் பெண்களுக்கு மாபெரும் நிகழ்வாகவும்,அமைதி,உள்ளடக்கம்,நிலைத்தன்மை மற்றும் நட்பு போன்ற மதிப்பு மிக்கவைகளால் சூழப்பட்ட சுழலாகவும் இருக்கும்.விளையாட்டுத்துறையில் உள்ள பெண்களை குறைத்து மதிப்பிடுவதுடன் குறிப்பாக உலகில் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களாகவே பல ஆண்டுகளாக கணிக்கப்படுகிறார்கள்.

தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணியில் ஐரோப்பாவின் பல நாடுகள், கனடா  உள்ளிட்ட நாடுகளிலும் இருக்கின்ற மிகைத்திறமையான எம் தமிழீழ இளம் தலைமுறை உதைபந்தாட்ட வீராங்கனைகள் இடம்பெற்றிருக்கின்றார்கள். தகமையும்,உதைபந்தாட்ட மதிநுட்பமும் வாய்ந்த பயிற்சியாளர்கள் அணியை மெருகேற்றி வழிநடத்துகின்றார்கள்.இவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி நோர்வே ஒஸ்லோவில் பயிற்சிகளை வழங்கி  தற்போது  BODO இல் நடைபெறவிருக்கும் CONIFA மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் பங்குபெற்றவுள்ளனர்.!



புதியது பழையவை