வைத்தியசாலையில் இருந்து சிறைக் கைதி தப்பியோட்டம்வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக  சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காலி  சிறைச்சாலை கைதியான  32 வயதினையுடைய நபரே  தப்பிச் சென்றுள்ளார்.


சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த நபர் காலி சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


இந்நிலையில், கைதி சிறைச்சாலை அதிகாரிகளிடம் கழிவறைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து கழிவறைக்குச் செல்வதற்காகக் கை விலங்குகளை அகற்றிய சிறைச்சாலை அதிகாரிகள், பாதுகாப்புக்காகக் கழிவறைக்கு முன்பாகக் காத்திருந்தனர்.எனினும், அவர் கழிவறையிலிருந்து பாய்ந்து தப்பிச் சென்றுள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதியது பழையவை